மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள், காம்தேனு நகருக்கு சென்று அந்த கட்டிடத்தை இடித்தனர். பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும், வெடி மருந்துகளை கொண்டு நான்கு மாடி கட்டிடத்தை இடித்துள்ளன. வெடிக்கும் போது கட்டிடம் முழுவதும் தரைமட்டமாகும் காட்சி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ம.பியில் சட்ட விரோதமான கட்டிடத்தை இடித்த மாநகராட்சி...அதிர்ச்சி வீடியோ!
Advertisment
Advertisment