கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்களை உச்சநீதிமன்ற உத்தரவு படி கேரள அரசு இடித்தது. அந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது மத்திய பிரதேசத்திலும் அதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதே போன்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்டிருந்த மூன்றடுக்கு அடுக்குமாடி கட்டடத்தை அம்மாநில அரசு வெடி வைத்து தகர்த்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்தியா முழுவதும் விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கபடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.