ADVERTISEMENT

மத்தியப்பிரதேச முதல்வருக்கு கரோனா தொற்று...

12:30 PM Jul 25, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்திலிருந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாகத் தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,310 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், பல மாநிலங்களில், அரசியல் தலைவர்களும் இந்தக் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் அமைச்சர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், அந்த வரிசையில் தற்போது, பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்குச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், தன்னுடன் தொடர்பிலிருந்த சக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊழியர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT