Advertisment

மத்தியப் பிரதேச முதல்வருக்கு கரோனா உறுதி !

sivraj singh chouhan

Advertisment

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 27 ஆயிரத்து 409 பேருக்கு மட்டுமே இன்று கரோனா உறுதியாகியிருந்தது. இந்தச்சூழலில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சாதாரண அறிகுறிகளே இருப்பதாகத் தெரிவித்துள்ள சிவராஜ் சிங் சவுகான், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றித் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தனது பணியை காணொளி வாயிலாகச் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவிருக்கும் சிரோமணி ரவிதாஸ் ஜெயந்தியிலும் காணொளி வாயிலாகக் கலந்துகொள்வேன் எனவும் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

MadhyaPradesh
இதையும் படியுங்கள்
Subscribe