மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து பரபரப்பானது.

m

Advertisment

இது குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் இமார்த்தி தேவி, ‘’அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையின்அருகில்சமைப்பதில் தவறு என்ன இருக்கிறது? சமைத்த பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதொன்றும் தவறு கிடையாது. கழிவறை அருகில் சமயலறை இருப்பதில் தவறு இல்லை. வீட்டிற்குள்ளேயே குளியலறையுடன் கழிவறையும்தான் இருக்கிறது. அதற்காக சாப்பிட மறுக்கிறார்களா என்ன?’’ என்று கேட்டுள்ளார்.

Advertisment

அமைச்சரின் இந்த பேச்சினால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.