Advertisment

திருப்பூரில் இளநீர் விற்கும் தாயம்மாளை புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி!

publive-image

Advertisment

'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (30/01/2022) காலை 11.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "விடுமுறை நாளில் குடும்பத்துடன் போர் நினைவிடத்திற்கு செல்லுங்கள். அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் நமது நாட்டின் பாடப்படாத நாயகர்கள்" எனத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இளநீர் விற்கும் தாயம்மாள், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார். இதனை நினைவுக்கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிலை சரியில்லாதபோதும் தாயம்மாள் தனது கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறி அவரை புகழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, லடாக்கில் திறந்தவெளி செயற்கை தடகள மைதானம், கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ளது. லஞ்சம், ஊழல் என்பது கரையான் போன்றது; அவை நாட்டையே அழிக்கக் கூடியது. நாம் நமது கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் லஞ்சம், ஊழல் இருக்காது என்றார்.

Speech
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe