Advertisment

வாராக்கடன் எதிரொலி ! இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் உடன் லட்சுமி விலாஸ் வங்கி (LVB) இணைப்பு !

லட்சுமி விலாஸ் வங்கியில் (LVB- Lakshmi Vilas Bank) வாராக்கடன் (NPA) அதிகரித்துள்ளதால் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிட் ( IBHFL - India Bulls Housing Finance Limited ) உடன் இணைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை ரிசர்வ் வங்கி (06/04/2019) அன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்தியாவில் பல வங்கிகள் வாராக்கடன் (NPA) சுமையால் இணைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட "பாங்க் ஆப் பரோடா வங்கி" உடன் தேனா , விஜயா வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வந்தது.

Advertisment

lvb

எனவே வருங்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதே சமயம் இந்திய வங்கிகள் அனைத்தும் பெரிய வங்கிகளாக உருவெடுத்து வருகின்றது என்றால் மிகையாகாது. மேலும் வாராக்கடன் (NON - PERFORMING ASSET) "NPA" தொடர்பான தகவல்களை ரிசர்வ் வங்கியிடம் மற்ற தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து அளித்து வரும் நிலையில் இதற்கான நடவடிக்கையும் உடனடியாக ரிசர்வ் வங்கி எடுப்பது ஆச்சரியமாக உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதே போல் மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் ஏற்கெனவே ஒப்புதல் வங்கிகள் இணைப்புக்கு (Banks Merger) வழங்கியுள்ளதால் கடன் சுமையில் இயங்கும் வங்கிக்களை இணைக்க ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த வங்கிகளும் சிறப்பாக செயல்படவும் , கடன் சுமையில் இருந்து எளிதில் மீண்டு வரவும் ரிசர்வ் வங்கியின் வங்கிகள் இணைப்பு

முடிவு பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நன்றாக இயங்கும் வங்கிகள் + கடன் சுமையில் இருக்கும் வங்கிகள் = "வங்கிகள் இணைப்பு"

பி.சந்தோஷ் , சேலம் .

Advertisment
Development join Bankloan bank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe