காரில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் சாலையின் ஓரத்தில் இருந்த போலிஸ் பூத் மீது மோதியதுடன் அதனை தன் செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் சன்னி சபர்வால். அவரின் அப்பா அந்த பகுதியில் மிக பெரிய தொழிலதிபராக இருக்கிறார். சன்னி சபர்வால் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய விலையுயர்ந்த ல்ம்போர்கினி வகை காரை எடுத்துக்கொண்டு சாலையில் சென்றுள்ளார். அப்போது அதிவேகத்தில் சென்ற அவர் காரை அருகில் இருந்த போலிஸ் பூத் மீது மோதியுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
காரை போலிஸ் பூத் மீது மோதியது மட்டுமில்லாது அங்கு நின்றுகொண்டு செல்பி போட்டோவும் எடுத்துள்ளார். இது அனைத்தும் அருகில் இருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த விபத்து நடந்த உடனே அவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் வைரலானதும், அவரை கைது செய்த போலிசார் அவரை சிறையில் அடைந்துள்ளனர். அவருடைய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.