Lungi, prohibition to leave the house with a nightie; A strange announcement that sparked controversy

Advertisment

வீட்டை வெளியே வரும் ஆண்கள் லுங்கியுடனும்பெண்கள் நைட்டியுடனும் வரக்கூடாது எனக்குடியிருப்போர் நலச்சங்கம் ஒன்று விதித்துள்ள ஆடைக் கட்டுப்பாடு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்த சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அங்குள்ள ஹிம்சாகர் அடுக்குமாடிக் குடியிருப்பின்குடியிருப்போர் நலச் சங்கத்தின் அறிவிப்பில், இக்குடியிருப்பில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது ஆண்கள் லுங்கியையும், பெண்கள் நைட்டியும் அணியக் கூடாது. குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்கா, விளையாட்டு மைதானத்திற்கும் லுங்கி, நைட்டி ஆகிய உடைகளில் வரக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குடியிருப்போர் நலச் சங்கத்தின் இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், எந்த உடை அணிய வேண்டும் என்று உத்தரவிடக் குடியிருப்போர் நலச் சங்கம் யார் என மக்களும் குடியிருப்பு வாசிகளும்கேள்வி எழுப்பி வருகின்றனர்.