கன்னியாஸ்திரிகளுக்கும் தேவாலய பாதிரியார்களுக்கும் இடையேயான ரகசிய உறவுகள் குறித்து புத்தகம் எழுதியிருக்கிறார் கன்னியாஸ்திரி லூசி கலபுரா. இப்புத்தகத்தை வரும் 10ம் தேதி வெளியிடவிருக்கிறார். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாஸ்திரி ஒருவரை பிஷப் பிராங்கோ முல்லக்கல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் கேரளாவில் போராட்டங்கள் வெடித்து, அதன் விளைவாக பிசப் கைது செய்யப்பட்டார்.
பிஷப்பிற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லூசிகலபுரா கத்தோலிக்க சபையில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆவேசம் அடைந்த லூசிகலபுரா, பாதிரியார்களின் ரசிகசிய உறவுகளை அம்பலப்படுத்தும் நோக்கில் இப்பத்தகத்தை எழுதியுள்ளார்.