A Lucknow woman who mysteriously happened in thailand

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் பிரியங்கா ஷர்மா. இவரது கணவர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் சமீபத்தில் விடுமுறைக்காக தாய்லாந்திற்கு சுற்றுலாச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தாய்லாந்தில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பிரியங்கா ஷர்மா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து லக்னோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில், பிரியங்கா ஷர்மாவை அவரது கணவர் ஆஷிஷ் தான் கொலை செய்துள்ளார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை பிரியங்காவின் தந்தை சத்யநாராயன் ஷர்மா முன்வைத்துள்ளார். ஆஷிஷ் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் ஆனது முதல் பிரியங்காவை உடலளவிலும் மனதளவிலும் கொடுமைப்படுத்தியதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.