Advertisment

சிறுமியின் அறையில் கேட்ட துப்பாக்கி சத்தம்; விளையாட்டின் பொது நிகழ்ந்த விபரீதம்...

gfbfgbgf

லக்னோவில் 12 வயது சிறுமி தனது தந்தையின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. லக்னோவை சேர்ந்த நரேந்திர சிங் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது தனது துப்பாக்கியை மேஜையில் வைத்துவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த அவரது 12 வயது மக்கள் விளையாடிக்கொண்டிருந்த பொது அந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வெடித்த துப்பாக்கி குண்டு அந்த சிறுமியின் உடலை துளைத்துள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நரேந்திர சிங்கிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

GunShot kid killed
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe