'Lower middle class people are getting poorer' - P. Chidambaram

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கரோனாபாதிப்பு குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறைஇன்று(06.06.2021) வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு2,88,09,339 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா பல்வேறு பொருளாதார சிக்கல்களையும் எதிர் கொண்டுள்ளது. இந்நிலையில் கீழ் நடுத்தர மக்கள்ஏழையாகின்றனர்என முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

''கரோனா காரணமாக கீழ் நடுத்தர மக்கள் ஏழையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கு மோடி அரசு என்ன செய்திருக்கிறது? 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு அரசின் இயலாமையும், தவறான கொள்கைகளுமே காரணம்'' என சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisment