
இந்தியாவில் 10வது நாளாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 2.97 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று (17.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 2,97,00,313 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 67,208 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில்1,03,570 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,84,91,670 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.80 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 2,330 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,81,903 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு8,26,740 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Follow Us