Advertisment

உயிரிழந்த மனைவிக்கு தத்ரூபமாக மெழுகுச் சிலை அமைத்த கணவர்!

பர

Advertisment

மனைவிக்கு கணவர் ஒருவர் மெழுகுச் சிலை அமைத்த சம்பவம் கர்நாடகாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். இதனால் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்த அவர் தற்போது புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று அந்த வீட்டின் புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் தன்னுடைய இறந்த மனைவியைப் போன்றே மெழுகுச் சிலை ஒன்றை அமைத்து அதை நடுநாயகமாக புது வீட்டில் வைத்துள்ளார் கிருஷ்ணன். இதனை அந்த விழாவிற்கு வந்த அவரது உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். புதிதாக பார்ப்பவர்களுக்கு அது உண்மையான பெண் என்று நினைக்கும் அளவுக்கு சிலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கள் தாயார் உயிருடன் வந்ததைப் போல் உணர்கின்றோம் என்று கிருஷ்ணனின் மகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்கள்.

statue
இதையும் படியுங்கள்
Subscribe