Skip to main content

ரயில் நிலையத்தில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி... வீடியோ எடுத்து இணையதளத்தில் ஏற்றிய மர்ம நபர்கள்..!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அடையாளம் தெரியாத நபர்கள் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து அதை ஆபாச வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
 

   lovers close at delhi metro station



இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி கூறும்போது, "மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும். வீடியோ பதிவு செய்த நாள், நேரத்தை வைத்து இந்த ஆபாச வீடியோவை யார் பதிவேற்றம் செய்தார்கள் என்பதை கண்டறியலாம். இதுகுறித்து விசாரித்து வருகின்றோம். பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Metro train service extension

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (26-03-2024) மாலை 07.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டான்ஸ் அணிகளிடையே போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை (27-03-2024 - 01.00 AM) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு அரசினர் தோட்டம் அல்லது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆன்லைனில் (சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஆப், பேடிஎம் ஆப், போன்பே ஆப், வாடஸ் அப், போன்றவை) மூலம் பயணச்சீட்டை பெறலாம். அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம். பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் பயணிக்கலாம். இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.