/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lovers434343.jpg)
சினிமாவில் வரும் காட்சிகளையெல்லாம் மிஞ்சும் வகையில், அசாம் மாநிலத்தில் ஒரு காதல் கதை அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தியைச் சேர்ந்தவர் 27 வயது இளைஞர் பிடுபன் தாமுளி. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் காதலித்து வந்த பிரார்த்தனா போரா உடல் நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்து விட்டார்.
காலமான பிறகும் தன்னுடைய காதலியின் உடலை அவர் கரம் பிடித்திருக்கும் அசாதாரண நிகழ்வுகள் தான் பேசுபொருள் ஆகியிருக்கிறது. பிரார்த்தனா போராவின் சடலத்திற்கு மாலையிட்டு, பொட்டு வைத்து பிடுபன் தாமுளி மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
திருமணத்திற்கு முன்பு இறந்து விட்ட காதலியை மனைவியாக அடக்கம் செய்ய விரும்பியதால்அவரது சடலத்துடன் திருமணச் சடங்கை மேற்கொண்டதாக பிடுபன் தாமுளி தெரிவித்துள்ளார். இதற்கு முதலில் மறுத்தாலும்பிடுபன் தாமுளியின் அன்பைக் கண்டு நெகிழ்ந்ததால்பின்புசம்மதம் தெரிவித்ததாகபிரார்த்தனாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)