Love with Auto Driver; A Belgian woman who became an Indian daughter-in-law

கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் இளம்பெண் ஆட்டோ ஓட்டுநரைக் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

கர்நாடக மாநிலம் ஹம்பியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் ராஜ். அவர்வெளிநாட்டுப் பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். நான்காண்டுகளுக்கு முன் பெல்ஜியத்திலிருந்து கெமில் என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தார். சுற்றுலா வழிகாட்டியான ஆனந்த் ராஜ் அவர்களுக்கு உதவி செய்தார்.

Advertisment

ஆனந்த் ராஜ் மற்றும் கெமிலுக்கும் இடையே நல்லதொரு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனந்த் ராஜின் நேர்மையைப் பார்த்த கெமில் அவரை காதலித்துள்ளார். இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து இருவரும் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் செய்ய இருந்தனர்.

கொரோனா காலகட்டம் என்பதால் நான்காண்டுகள் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இணையத்திலும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.