Skip to main content

பாஸ்போர்ட்டில் மலர்ந்த தாமரை... சர்ச்சைக்கு புதிய விளக்கமளித்த மத்திய அரசு...

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

இந்திய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம் அச்சிடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

 

lotus symbol in indian passport

 

 

நேற்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய பாஸ்போர்ட்டுகளில் ஏன் 'தாமரை' அச்சிடப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காண்பதற்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பாஸ்போர்ட்களில் அச்சிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் வருங்காலங்களில் பிற தேசிய சின்னங்களும் சுழற்சி முறையில் அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “தாமரை நமது தேசிய மலர். மேலும் போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காணும் வகையிலான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாகும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
World's Most Powerful Passport List; Do you know how many places in India?

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பலவீனமான பாஸ்போர்டுகள் குறித்து தரவரிசையை ஹென்ஸி பார்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசையை, சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அதில், விசா இல்லாமல், பாஸ்போர்ட் மூலம் மட்டுமே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் ‘சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்’ என்று கருதப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை பட்டியலில், 194 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. 

அந்த வகையில், இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளனர். அதாவது, இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் உலக அளவில் 194 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். இதையடுத்து, இரண்டாவது இடங்களை பிடித்துள்ள தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். 

இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், 192 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். அதனை கருத்தில் கொண்டு இந்த நாடுகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இந்த தரவரிசை பட்டியலில், சீனா 62வது இடத்தையும், இந்தியா 80வது இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, உள்ளிட்ட சுற்றுலா நாடுகளும் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்த தரவரிசையில் 101வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஈராக் 102வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 104வது இடத்தையும் பிடித்துள்ளது. 

Next Story

போலி பாஸ்போர்ட்! - பிடிபட்ட கிரிமினல்! 

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Fake passport! Caught criminal!

 

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், போலி பாஸ்போர்ட் மூலம் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகச் சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாஸ் பண்ணப்பட்டது. 

 

அதன் பேரில் இந்த மாதம் 4ம் தேதி மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளிடம் இமிக்ரேசன் அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம், பரமக்குடி அருகே உள்ள அக்ரமிசியைச் சேர்ந்த பாலுச்சாமியின் மகன் முருகன் என்பவரின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தனர். பரிசோதித்துக் கொண்டே பல கேள்விகளை அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னார் முருகன். 

 

இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட இமிக்ரேசன் அதிகாரிகள், தீவிரமாகப் புலனாய்வு செய்ததில், அவரது உண்மையான பெயர் ஜெகன் என்பதையும், ராமநாதபுரம் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த நாகசாமி என்பவரின் மகன் என்பதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் வைத்துள்ள பாஸ்போர்ட் போலி என்பதையும் கண்டறிந்ததோடு, சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்கிற தகவல்களும் ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து முறையாகப் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் ஜெகன். 

 

இதில் கொடுமை என்னவெனில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வி.ஐ.பி.க்களுடன் நெருக்கத்தை வைத்துக் கொண்டு அக்கட்சிகளின் தலைவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அக்கட்சியைச் சேர்ந்தவர் எனக் காட்டிக் கொள்பவராம் ஜெகன். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரிடம் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.