Advertisment

தேசிய நெடுஞ்சாலையில் லாரி- காவல்துறை வாகனம் சேஸ்! 

Lorry-Police Vehicle Chase on National Highway!

கால்நடைக் கடத்தலில் ஈடுபட்ட லாரியை காவல்துறையினர் சினிமா பாணியில் கடத்திச் சென்று, மடக்கி நான்கு பேரை கைது செய்தனர்.

Advertisment

ஹரியானா மாநிலம், குருகிராமில் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற லாரியில் பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கடத்தப்படுவது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, ஜீப்பில் காவல்துறையினர் துரத்திச் சென்றனர். கொட்டும் மழையிலும், கடத்தல்காரர்கள் லாரியை நிறுத்தாமல் வேகமெடுத்ததால், லாரி டயரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

Advertisment

இதையடுத்து, வாகனங்கள் சென்றுகொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் லாரிக்குள் இருந்த கடத்தல் காரர்கள் வெளியே குதித்து தப்பிக்க முயன்றனர். டயர் பஞ்சரானதால் லாரி வட்டமடித்து நிற்க, சுற்றி வளைத்த காவல்துறையினர், துப்பாக்கி முனையில் நான்கு பேரை கைது செய்தனர்.

இந்த துரத்தல் காட்சி சினிமா படப்பிடிப்பை மிஞ்சும் வகையில் இருந்தது.

haryana incident police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe