புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவருடைய தந்தை மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் செல்லஞ்சேரி பகுதியைச் சார்ந்த லாரி ஓட்டுநரான பூவரசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து செல்லஞ்சேரி வயல்வெளியில் மறைந்து இருந்த பூவரசனை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பின்னர் புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.