மத்திய பிரதேசத்தில் திருமண விழா ஒன்றிற்காக சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்ததில்21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

மத்திய பிரதேசம், சித்தி மாவட்டத்தில் நடக்கவிருந்த திருமண விழாவிற்கு சுமார்ஐம்பது பேர் லாரியில் ஒன்றாக சென்று கொண்டிருந்தனர். அமேலியா என்ற இடத்தில் சோன் ஆற்றின் மீதுள்ள பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரிகட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாகஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

ACCIDENT

ACCIDENT

இந்த விபத்தில் நீரில் மூழ்கியும், மூச்சு திணறியும்21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர்,போலீசார், பொதுமக்கள் என அனைவரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திருமணவிழாவிற்கு செல்லும்போது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.