Advertisment

'உயிரோடு இருக்கும் வரை...'-உறுதி கொடுக்கும் மோடி, தேவகவுடா

karnataka issue

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

Advertisment

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Advertisment

karnataka

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டிய பிறகு தான் எனது உயிர் பிரியும் என்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். “மேகதாது திட்டம் நிறைவேற வேண்டுமானால், பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தமிழகம் எங்கள் வழியில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டு, நிலைமையின் யதார்த்தத்தை அவரிடம் முன்வைப்பேன். அவர் ஏற்கனவே பலமுறை எனது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டிய பிறகே எனது உயிர் பிரியும்'' என்றுகூறியுள்ளார்

modi

இந்திய அரசியலமைப்பின் 370 சட்ட பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்ததோடு மட்டுமல்லாது ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதுதொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் மோதிக்கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமடையும் நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று துலே பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மோடி பரபரப்பாக பேசப்படும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கும் தீர்மானத்தை பற்றி பேசியுள்ளார். 'நான் உயிரோடு இருக்கும் வரை' ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 37-0ஐ மீண்டும் அமல்படுத்த முடியாது என பிரதமர் மோடி பேசி உள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

kashmir modi devagavuda karnataka mehathathu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe