மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தொகுதியாக வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தென் இந்தியாவிலிருந்து ராகுல் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என தென் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் கூறிய நிலையில், கன்னியாகுமாரி, கர்நாடகாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.