சி ஓட்டர் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 60,000 வாக்காளர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளின் முடிவை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தென் இந்தியாவில் மோடியின் செல்வாக்கு மிகவும் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisment

c voter survey loksabha election

இந்த கருத்துக்கணிப்பில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 74 சதவிகித மக்கள் மோடியின் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். அதற்கடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் 68 சதவீதம் மக்கள் மோடிக்கு ஆதரவாக கருது கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் வட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை மாநிலங்களில் 45 சதவீதத்திற்கு மேல் எடுத்து பலமாக உள்ளது.

Advertisment

ஆனால் தென் இந்தியா பக்கம் வரும் போது மோடியின் செல்வாக்கு மிக மோசமான நிலையிலிலேயே உள்ளது. அதன்படி கர்நாடகாவில் 38 சதவீதமும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 23 சதவீதமும் கேரளாவில் 7 சதவீதமும் மோடிக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே மோடியின் செல்வாக்கு மிக குறைந்த இடமாக உள்ளதா தமிழ்நாட்டில் தான். தமிழகத்தில் மோடிக்கு ஆதரவாக 2.2 சதவீதம் பேர் தான் கருத்து கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டு, காவேரி, ஸ்டெர்லைட், இயற்கை சீற்றங்கள் போன்ற விவகாரங்கள் தமிழகத்தில் மோடியின் செல்வாக்கு குறைய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.