இன்று காலை தேர்தல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் வேண்டி விண்ணப்பித்த கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது. அதை தொடர்ந்து இன்று மாலை ஐந்து மணிக்கு விக்யான் பவணில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்த சந்திப்பில் தேர்தல் அட்டவணை தேதி, தேர்தல் எத்தனை கட்டங்களாக நடக்கும், இடைத்தேர்தல்கள் நடக்குமா ஆகியவை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.