டாப் முதல்வர்கள் பட்டியல்... எடப்பாடிக்கு இடம் இல்லை... கருத்துக்கணிப்பு முடிவுகள்...

இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற கருத்துக்கணிப்பை ஐ.எ.என்.எஸ் நிறுவனம் நடத்தியுள்ளது.

eps

அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநில முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என அம்மாநில மக்கள் 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஹிமாச்சல பிரதேச முதல்வர், ஒரிசா முதல்வவர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆகியோர் குறைந்த மதிப்பெண்கள் பிடித்து பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என 42 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

eps loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe