லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என தேர்வுக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலை ஒழிக்கவும், அதிகாராத்தில் உள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் கொண்டுவரப்பட்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணியை, அதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் லோக்பால் அமைப்பு தொடர்பான மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லோக்பால் வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...
Advertisment