Lok Sabha Speaker's advice on conducting the monsoon session smoothly!

Advertisment

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சி மக்களவைக் குழு தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார்.

வரும் ஜூலை 18- ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்து கட்சி மக்களவைக் குழு தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று (16/07/2022) மாலை 04.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Advertisment

ஒவ்வொரு கூட்டத்தொடர் தொடங்கும் முன்பும், இதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.