ADVERTISEMENT

ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் நீண்ட இடைவெளி ஏன்? நிதிஷ்குமார்

10:22 AM May 19, 2019 | rajavel

ADVERTISEMENT

மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்று பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

7வது கட்டமாகவும், இறுதி கட்டமாகவும் இன்று (19.05.2019 ஞாயிற்றுக்கிழமை) 59 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பீகார் மாநிலத்தில் 8 மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. பாட்னா தொகுதியில் பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் வாக்களித்தார்.




அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது. கோடைக்காலத்தில் மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களாக நடத்தியிருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.


முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி 13 மாநிலங்களில் 97 தொகுதிகளிலும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளிலும், 4ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளிலும், 5ம் கட்ட தேர்தல் மே 6ஆம் தேதி 7 மாநிலங்களில் 51 தொகுதிளிலும், 6ம் கட்ட தேர்தல் மே 12ஆம் தேதி 7 மாநிலங்களில் 59 தொகுதிளிலும், 7ம் கட்ட தேர்தல் மே 19ஆம் தேதி 7 மாநிலங்களில் 59 தொகுதிளிலும் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT