இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்றது. இதன் காரணமாக சுமார் மூன்று மாதங்களாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்துள்ளனர். இதற்கு காரணம் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்களை கவரும் வகையில் ட்விட்டர், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு கட்டணத்தைச் செலுத்தி பிரச்சாரம் செய்துள்ளனர். அதற்கான கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே -15 ஆம் தேதி வரை அரசியல் கட்சிகள் ரூபாய் 53 கோடி வரை இணையதள பிரச்சாரத்திற்கு செலவிட்டுள்ளனர்.அதன் படி பாஜக பேஸ்ப்புக்கில் 2,500 -க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்காக ரூபாய் 4.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.

social media

Advertisment

Advertisment

அதனைத் தொடர்ந்து கூகுள், யூடியூபில் விளம்பரத்திற்காக ரூபாய் 17 கோடியை செலவு செய்துள்ளது. இதே போல காங்கிரஸ் கட்சி ரூபாய் 1.46 கோடி செலவில், 3686 விளம்பரங்களை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. கூகுள், யூடியூபில் 425 விளம்பரங்களுக்காக சுமார் ரூபாய் 2.71 கோடி செலவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விளம்பரத்துக்காக பேஸ்ப்புக்கில் ரூபாய் 29.28 லட்சமும், ஆம் ஆத்மி கட்சி ரூபாய் 13.62 லட்சம் செலவிட்டுள்ளது. கூகுள் விளம்பரத்துக்காக மட்டும் ஆம் ஆத்மி கட்சி ரூபாய் 2.18 கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.