Skip to main content

மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் மே 24 ஆம் தேதி வெளி வரவே அதிக வாய்ப்பு!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

இந்தியா முழுவதும் 17- வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் கடைசிக் கட்ட மக்களவை  மே-19 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் ஆணையர்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை செய்து வருகிறார். மேலும் டெல்லியில் இருந்து தேர்தல் மேற்பார்வையாளர்கள் குழு அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் வாக்கு எண்ணிக்கை மே-23 ஆம் தேதி நடைப்பெற உள்ளதால் மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவர மே- 23 ஆம் தேதி அன்று மாலை அல்லது 24- ஆம் தேதி  காலை ஆகலாம் என இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெய்ன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

 

vvpat

 

மேலும் அவர் கூறுகையில் முந்தைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு எந்திரங்களை மட்டும்  சரிப்பார்த்தோம். ஆனால் தற்போது நான்கு இயந்திரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. ஒரு விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குகளின் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்க்க சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என தெரிவித்தார். இதனால் இறுதி முடிவுகள் வெளிவர கால தாமதமாகும். வாக்கு பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரத்தில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் 28 எதிர்க்கட்சிகள் விவிபாட்-யில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும் , வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்பிட்டு பார்க்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அளித்துள்ள பதிலில் எதிர்கட்சிகளின் கோரிக்கையால் மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக ஐந்து நாட்கள் ஆகும் என தெரிவித்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபாட் (VVPAT) உடன் வாக்குப்பதிவு எந்திரங்களை (EVMs) ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் சுமார் 25000 விவிபாட் எந்திரத்தை சரிபார்க்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்'-சாஹூ வேண்டுகோள்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
'Everyone should vote without fail'-Sahu pleads

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ பேசுகையில், ''ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஈவிஎம் மிஷின்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உள்ள வாக்குச் சாவடிகளுக்கு நாளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் தேர்தல் பணியாளர்கள் நாளை மாலைக்குள் அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளுக்குச் சென்று சேருவார்கள். பாதுகாப்பு நடவடிக்கைக்காக போலீசார், துணை ராணுவ படையினர் எந்தெந்த பகுதிகளில் இருக்க வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 68,000 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. அதில் 45 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் எங்கெங்கு இன்டர்நெட், ரிசப்ஷன் எல்லாம் நன்றாக இருக்குமோ அங்கெல்லாம் வாக்குச்சாவடியைக் கண்காணிப்பதற்காக சிசிடிவி மூலமாக கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக ரேம் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளருமே தவறாமல் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.