parliament

Advertisment

தென்னாப்பிரிக்கா நாட்டில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளஒமிக்ரான்வைரஸ், அதிக பரவல் தன்மை கொண்டிருக்கலாம் எனவும், மற்ற வகை கரோனாக்களைவிட தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. உலக சுகாதார நிறுவனமும்,ஒமிக்ரானால் ஏற்படும் உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் ஒமிக்ரானால், கரோனாபாதிப்புகள் அதிகரிக்கலாம்என்றும், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம் எனவும் உலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தஒமிக்ரான்கரோனாஅச்சத்தால், உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. சில நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வர தடை விதித்துள்ளனர். இந்தநிலையில் நாளை நாடாளுமன்றத்தின் மக்களவையில், விதி எண் 193ன்கீழ்ஒமிக்ரான்கரோனாகுறித்து விவாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விதி எண் 193ன்கீழ்,அவசரமான பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.