தங்கம், வைரம் என ஏராளமான ஆபரணங்கள், பணம் என கொள்ளையடிக்க நினைத்து லாக்கரைத் தூக்கிச் சென்ற திருட்டு கும்பல் ஏமாந்து போயுள்ளது.

Theif

பெங்களூரு ஜே.சி.நகர் பகுதியில் கடந்த வாரம் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரைக் கைதுசெய்த காவல்துறை விசாரணை நடத்தியது. திருட்டு வேலையில் ஈடுபட்ட ஏழு பேரில் ஒருவர் அதே வீட்டில் வேலை பார்த்தவர். மற்றவர்கள் செக்யூரிட்டிகளாக அக்கம்பக்கத்து கட்டிடங்களில் வேலை செய்தவர்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் ஜே.சி.நகரில் உள்ள வீட்டிற்கு சென்ற கும்பல், அங்கிருந்த 25 எடையுள்ள லாக்கரைத் தூக்கிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது. மிகவும் கனமான அந்த லாக்கரை ஒருவழியாக உடைத்து பார்த்தபோது உள்ளே வெறும் ரூ.100 மட்டுமே இருந்துள்ளது.

Advertisment

ஆனாலும், இந்தக் கும்பல் பல திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மீட்டுள்ளனர் காவல்துறையினர்.