lockdown extension issue - Air India new announcement

கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸூக்கு இதுவரை முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அனைத்து நாடுகளும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த நாடுதழுவிய 3- ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் மே 31 ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள், மெட்ரோ ரயில் சேவை என எதுவும் இயங்காது எனவும் அறிவித்துள்ளது.

Advertisment

Advertisment

இந்நிலையில் அனைத்து ஏர் இந்தியா விமானங்களில் தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகே விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது.