Advertisment

அதிகரிக்கும் கரோனா - மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு! - மகாராஷ்ட்ரா முதல்வர் அறிவிப்பு

MAHARASHTRA

Advertisment

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, நேற்று (21.02.2021) ஒரேநாளில் அங்கு 7 ஆயிரம் பேருக்குக் கரோனாதொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்ரே, “அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கரோனாதொடர்ந்து அதிகரித்தால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்”எனத் தெரிவித்துள்ளார். மேலும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனாதொற்று பரவலின்நிலை, அபாயகரமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமராவதி மாநகராட்சி மற்றும் அச்சல்பூர் நகராட்சியில் கரோனாபரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இப்பகுதிகளில் இன்று (22.02.21) இரவு 8 மணியிலிருந்து, மார்ச்1 ஆம் தேதி காலை6 மணிவரைஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமராவதிமாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கின்போது காலை8 மணியிலிருந்து, மதியம் மூன்று மணிவரைஅத்தியாவசியப் பொருட்களுக்களான கடை திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல்நாசிக்மாவட்டத்தில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. அடுத்தகட்டஉத்தரவு வரும்வரை இரவு 11 மணிமுதல்காலை5 மணி அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில்இருக்குமெனநாசிக்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

lockdown Maharashtra night curfew
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe