Local elections:  attack on journalists!

Advertisment

ஒடிசா மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்துவருகிறது. அந்த வகையில் இன்று ஒடிசாவில் மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், ஜிப்பூர் மாவட்டத்தில், பச்சாலா பஞ்சாயத்துக்குட்பட்ட வாக்கு மையங்களில் நுழைந்த மர்ம கும்பல், வாக்குப் பதிவு இயந்திரங்களை கைப்பற்ற முயன்றனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த அந்தக் கும்பல் சிறை பிடித்தது. அதன் பிறகு செய்தியாளர்களை கட்டிவைத்து அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் செய்தியாளர்களை மீட்டு அங்கிருந்து அனுப்பிவைத்தனர். மேலும், அந்தக் கூட்டு வன்முறையில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.