திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு! உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்...

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக் கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் தொடங்கி, 2 கட்டங்களாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகளும் கட்சி உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெற்றுக்கொண்டது.

supreme court

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி கடந்த 28ஆம் திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரண்டு வாரகாலம் இதன் விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

stalin Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe