A little spark; 12 omni buses burnt down

வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே நேரத்தில் 12 ஆம்னி பஸ்கள் பற்றி எரிந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரபத்திர நகரில் எஸ்.வி.கோச் என்ற தனியார் பேருந்து பாடி பில்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஊழியர்கள் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீப்பொறி பற்றிய நிலையில் முதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து தீயானது அருகருகே நின்றிருந்த பக்கத்து பேருந்துகளுக்கும் பரவத்தொடங்கியது.

Advertisment

இந்த விபத்தில் மொத்தமாக 12 ஆம்னி பேருந்துகள் தீயில் எரிந்து நாசமாகின. உடனடியாக சம்பவ இடத்திற்கு, ஏழுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் அங்கு கரும்புகை சூழந்தது. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர். வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 ஆம்னி பேருந்துகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.