Advertisment

இவன்தான் குட்டி குமாரசாமி! - அரசாங்கத்தின் குழந்தை...

பெற்றெடுத்த தாய், தந்தை கைவிட்டுச் சென்ற குழந்தை, இனி அரசின் கட்டுப்பாட்டில் வளர இருக்கிறான். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான புதிய அரசு ஆட்சிமைத்திருக்கும் நேரத்தில், தூக்கிவீசப்பட்ட குழந்தை புதிய வாழ்வைத் தொடங்க இருக்கிறது.

Advertisment

kumarasamy

கர்நாடக மாநிலத்தில் உள்ளது தொட்டதொகுரு நகரம். இந்தப் பகுதியில் கட்டுமானப்பணியில் இருக்கும் கட்டிடத்தின் அருகில், பிளாஸ்டிக் பைக்குள் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. கழுத்தில் தொப்புள்கொடி சுற்றியிருந்த அந்தக் குழந்தை பிறந்து சில மணிநேரமே ஆகியிருக்கலாம்.

Advertisment

தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட, துணை உதவி ஆய்வாளர் நாகேஷ் நேரடியாக சென்று குழந்தையை மீட்டார். மிகவும் பலவீனமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

kumarasamy

இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட, குழந்தையை தூக்கிக்கொண்டு காவல்நிலையத்திற்கு விரைந்தார் நாகேஷ். அந்த சமயமும் பலவீனமாக இருந்த குழந்தைக்கு, மூன்று மாத குழந்தைக்கு தாயான காவலர் அர்ச்சனா தாய்ப்பாலூட்டினார். குழந்தை போதுமான தெம்பு கிடைத்ததும் வீறிட்டு அழ, காவல்நிலையமே மகிழ்ச்சியில் குதித்தது.

பிறந்த சில மணிநேரத்தில் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்த குழந்தைக்கு குமாரசாமி என பெயர்சூட்டினார் காவலர் நாகேஷ். புதிய அரசு வந்திருக்கும் நிலையில், அந்த அரசின் குழந்தையாக பிறந்திருக்கும் இவனுக்கு அந்தப் பெயர் பொருத்தமாகவே இருக்கிறது எனக்கூறிய நாகேஷ் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது.

karnataka kumaraswamy newborn
இதையும் படியுங்கள்
Subscribe