union minister

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு இந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதனையொட்டி, ஏற்கனவே பதவிவகித்து வந்த பல்வேறு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

Advertisment

பதவி விலகிய மத்திய அமைச்சர்களும் அவர்களதுதுறைகளும் வருமாறு:

1. ஹர்ஷ் வர்தன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

Advertisment

2. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், கல்வித்துறை அமைச்சர்

3. அமைச்சர் சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

4.தாவர் சந்த் கெஹ்லோட், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்

5.ரவிசங்கர் பிரசாத், சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்

6.பிரகாஷ் ஜவடேகர்,தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை,சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றதுறை,கனரக தொழில்கள் மற்றும் பொதுத்நிறுவனங்கள்.

7.சந்தோஷ் கங்வார், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்.

8. திபஸ்ரீசவுத்ரி , பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்

9.டான்வே ரோசாஹேப், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர்

10.சஞ்சய் தோத்ரே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர்

11.அஸ்வினி குமார் சவுபே, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்

12.பாபுல் சுப்ரியோ, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்துறை இணை அமைச்சர்

13. பிரதாப் சாரங்கி, கால்நடை பராமரிப்புத்துறை,மற்றும் மீன்வளத்துறை மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் இணை அமைச்சர்.