Advertisment

தீபாவளியை தோற்கடித்த ஓணம்... கேரள குடிமகன்களின் சாதனை...

ஓணம் பண்டிகைக்குகேரளா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் இந்த ஓணம் வாரத்தில் மட்டும் 487 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்துள்ளது.

Advertisment

liquor sale in kerala for onam celebrations

தற்போதைய நிலையில் பண்டிகை காலம் என்றாலே உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் முக்கிய இடத்தை பெறுவது மதுபானம். உடல்நலத்திற்கு தீங்கானது என விளம்பரங்களுடனேயே மதுபானம் விற்கப்பட்டாலும், விற்பனை மட்டும் குறைவில்லாமலேயே நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி நேரத்தில், டாஸ்மாக் மூலம் சுமார் 330 கோடி ரூபாய் வருவாய் ஈட்டபட்டது. ஆனால் கேரளாவின் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தமிழகத்தின் தீபாவளி கொண்டாட்டத்தை முந்தியுள்ளது.

Advertisment

கேரளாவில் ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூ.1,229 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.அதிலும் குறிப்பாக ஓணம் பண்டிகையின் முக்கிய நாட்களில் மட்டும் 487 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மது விற்பனையில் முதல் மூன்று இடங்களை திருச்சூரில் உள்ள இரிஞ்சலகுடா, ஆலப்புழாவில் உள்ள கச்சேரிபாடி ஜங்சன், திருவானந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் ரோடு ஆகிய இடங்கள் பிடித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TASMAC onam Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe