Advertisment

மெட்ரோவில் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி

Liquor allowed in Metro; Delhi Govt gave conditional approval

மெட்ரோவில் நிபந்தனைகளுடன் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisment

மெட்ரோ ரயிலில் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கலாமா, வேண்டாமா என்று தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு டெல்லிமெட்ரோவில் மது பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இருப்பினும் ஒரு பயணி இரண்டு சீலிடப்பட்ட மது பாட்டில்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதே நேரத்தில் ரயில் மற்றும் மெட்ரோ வளாகத்தின் எந்த பகுதியிலும் மது அருந்துவதற்கு அனுமதி இல்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ வளாகத்திலோ அல்லது ரயிலிலோ மதுபோதையில் அநாகரீகச் செயல்களில்ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Delhi Metro
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe