பைக்கில் வந்தவருக்கு சிங்கம் ஒன்று வழிவிட்ட சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. குஜராத்தில் கிர் வனவிலங்கு பூங்கா இந்தியாவிலேயே மிகப் பெரியது. இங்கு 200க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. சில நாட்கள் முன்பு கிர் பூங்காவிற்கு சுற்றுலா சென்ற நபர்கள் வாகனங்களில் காடுகளுக்குள் சென்று சுற்றி பார்த்துள்ளனர்.

Advertisment

அப்போது அந்த காட்டுப்பாதைக்கு அருகில் இருக்கும் கிராமத்தினர் அந்த வழியாக உள்ள ஒற்றையடி பாதையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்கள். எதிர்புறம் சிங்கம் ஒன்று வந்துள்ளது. ஆனால் அந்த சிங்கம் எதிரே வந்த அவர்களை எதுவும் செய்யாமல் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடும் வகையில் விலகிச்சென்றது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.