/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_227.jpg)
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் நேற்று (11.07.2021) மின்னல் தாக்கியதில் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 41 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின்பிரயாக்ராஜ் பகுதியில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குஉடனடியாக உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்வர், அம்மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயை நிவாரணமாகஅறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியும், மூன்று மாநிலங்களிலும் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்கு 2 லட்சம் ரூபாயை நிவாரண தொகையாக வழங்கவும், மின்னல் தாக்கியதில் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்கவும்உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)