கட்டுமான பணியின் பொழுது லிப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அகமதாபாத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று வழக்கம் போல பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது பணியாளர்கள் பயணிக்கும் லிப்ட் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர்.