திரைப்பட துறையில்சாதனைபுரிந்ததை கவுரவப்படுத்தும் விதமாகநடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தவிருது வழங்கப்பட இருக்கிறது. இதனை மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி செய்துள்ளார். இந்த விருது அறிவிப்பின் காரணமாக அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

hjk

Advertisment

திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைதளங்கள் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது தர்பார் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிப்பு புதிய உற்சாகத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.