Mukesh Ambani family; Police build-up

Advertisment

மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

கடந்த புதன் அன்று ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு தெரியாத எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பில் பேசிய நபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து மருத்துவமனையையும் வெடி வைத்து தகர்க்கப்போவதாக கூறினார்.

மர்ம நபரின் தொலைபேசியின் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுனர்கள் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு டிபி மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதே போல் முகேஷ் அம்பானி, நேத்தா அம்பானி குடும்பத்தினரை கொல்லப்போவதாகவும் மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்து விடுவோம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.