Advertisment

ஒரே ஒரு தும்மலால் பிரிந்த உயிர்; நண்பர்கள் கண் முன்னே 18 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்

A life separated by a single sneeze; Tragedy befell an 18-year-old in front of his friends

Advertisment

நண்பர்களுடன் இரவில் நடந்து வந்த இளைஞருக்கு ஏற்பட்ட தும்மலினால் இளைஞர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் மீரட் அருகில் உள்ள கித்வாய்நகர் பகுதியைச் சேர்ந்த ஜூபைர் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் நடந்து வந்துள்ளார். நண்பர்களுடன் செல்லும் பொழுதே திடீரென தும்மல் வந்துள்ளது. தும்மியதும் சோர்வாகக் காணப்பட்ட இளைஞர் தனது நண்பனின் தோளில் கை போட்டு நிற்க முயற்சி செய்து நண்பருக்கு முன்னால் விழுந்துள்ளார்.

Advertisment

முதலில் ஜூபைர் தடுமாறி கீழே விழுந்துவிட்டதாக நினைத்த நண்பர்கள் தொடர்ந்து அவரை எழுப்ப முயன்றும் அவர் எழவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை தூக்கியுள்ளனர். உடனடியாக இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத்தெரிவித்தனர். எதிர்பாராத இந்த இறப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பானமொத்த பதிவும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து இணையத்திலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

cardiac uttarpradesh meerut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe