குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் உடல் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஹர்ஜிந்தர் சிங்கின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இறுதி மரியாதைச் செலுத்தினர்.
இதனையடுத்து, ஹர்ஜிந்தர் சிங்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளைச் செய்தார். பின்னர், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் ஹர்ஜிந்தர் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.